கொழும்பில் கடத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்டதாகக் கூறப்படும் சுவிட்சர்லாந்து தூதரக பெண் அதிகாரி இன்றும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்.
இதன்போது, அவரை கொழும்பு சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்து தூதரக பெண் அதிகாரி, நேற்று முன்தினம் ஐந்தாவது நாளாகவும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.