கொஹுவலை, சரணங்கர வீதி, போதியவத்த பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மீது இன்று இரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 16 வயதுடைய சிறுமி ஒருவர் காயமடைந்துள்ளார். 

மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக முதற்கட்ட பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த சிறுமி களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் கொஹுவலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.