✍🏻 எஸ்.என்.எம்.சுஹைல்

நடந்துகொண்ட எதிரணியினர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் காலி மாநகர சபையில் இன்று (டிசம்பர் 30) இடம்பெற்ற நிகழ்வுகள் ஒட்டுமொத்த மக்கள் பிரதிநிதித்துவத்திற்கே ஒரு கரும்புள்ளியாக அமைந்துள்ளது. 

தனது கடமையைச் செய்ய வந்த மாநகர சபை செயலாளர் திருமதி எம்.எச். பஸ்ரியா பர்வீன் உள்ளிட்ட பெண் அதிகாரிகள் மீது, எதிர்க்கட்சியினர் மேற்கொண்ட எதிர்ப்பு நடவடிக்கை அல்லது தாக்குதல் முயற்சி மற்றும் அநாகரீகமான நடத்தை வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியது. 

பெண் அதிகாரிகள் என்றும் பாராமல், அவர்கள் மீது தண்ணீர் வீசியமை, கூச்சலிட்டு அச்சுறுத்தியது மரியாதையற்ற செயலாகும். 

சபை நடவடிக்கைகளில் மாற்றுக் கருத்துக்கள் இருந்தால் அவற்றை விவாதங்கள் மூலம் வெளிப்படுத்த வேண்டுமே தவிர, வன்முறை மூலம் அதிகாரிகளை அசௌகரியம் ஏற்படும் விதத்தில் நடந்துகொள்வது ஜனநாயகமல்ல. 

மக்கள் பிரதிநிதிகளே இத்தகைய வன்முறையில் ஈடுபட்டால், அது சமூகத்திற்கு தவறான முன்னுதாரணத்தை வழங்கும். சபை அமர்வில் அநாகரீகமாக நடந்துகொண்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மீது உரிய அதிகாரிகள் உடனடியாகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். 

அரசு அதிகாரிகள் அச்சமின்றித் தமது கடமைகளைச் செய்வதற்கான சூழல் உறுதிப்படுத்தப்பட வேண்டும். அரசியல் நாகரீகம் பேணப்படவேண்டும்! வன்முறை அரசியலுக்கு இடமளிக்கக்கூடாது!