மத்துகம பிரதேச சபையின் செயலாளரைத் தாக்கியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், அப்பிரதேச சபையின் தவிசாளர் கசுன் முனசிங்க பொலிஸாரிடம் சரணடைந்துள்ளார்.
குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த தவிசாளர், இன்று மத்துகம உதவி பொலிஸ் அத்தியட்சகர் முன்னிலையில் சரணடைந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

.jpeg)
0 Comments