Page Nav

தலைப்புச் செய்திகள்

latest

அக்குரணை விபத்து: இனவாதம் கட்டியவர் பதிவு செய்யப்படாத போலி வைத்தியர்?



அக்குரணையில் இடம்பெற்ற விபத்தைத் தொடர்ந்து, முஸ்லிம் மக்கள் தொடர்பாக இனவாதக் கருத்தை வெளியிட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட நபர் ஒரு வைத்தியர் என நம்பப்பட்ட நிலையில், அவருக்கு எதிராக இலங்கை மருத்துவப் பேரவையில் ராஜ்குமார் ராஜீவ்காந்த் என்பவரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், அவரின் முறைப்பாட்டுக்குப் பதிலளித்துள்ள இலங்கை மருத்துவப் பேரவை, குறித்த நபர் தனது பதிவுகளில் வைத்தியராகப் பதிவு செய்யப்பட்டிருக்கவில்லை எனத் தெரிவித்துள்ளது.

மேலும், இலங்கை மருத்துவப் பேரவையில் பதிவு செய்யப்படாத ஒருவருக்கு எதிராக, மருத்துவப் பேரவையின் சட்ட வரம்பிற்குள் ஒழுக்காற்று நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாது என்றும் அப்பதிலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இனவாதக் கருத்துகள் சமூக நல்லிணக்கத்திற்கும் மனிதநேயத்திற்கும் அச்சுறுத்தலாக அமையும் நிலையில், இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் உரிய விசாரணைகளும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட வேண்டியது அவசியமாகும்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.