Page Nav

தலைப்புச் செய்திகள்

latest

அநுராதபுர மாவட்டம் சாதனை மாணவர்களுக்கு கௌரவம்!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்வி, கலாச்சார மற்றும் நலன்புரிப் பிரிவின் ஏற்பாட்டில், க.பொ.த. உயர்தர மற்றும் சாதாரண தரப் பரீட்சைகளில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வுத் தொடர், இம்முறையும் நாடளாவிய ரீதியில் “AWARD OF EXCELLENCE – ASSAD INSPIRE AWARD” என்ற திட்டத்தின் கீழ் இடம்பெற்றது .
இத் திட்டத்தின் கீழ், க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் 3A சித்திகளைப் பெற்ற மாணவர்கள், க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் 9A சித்திகளைப் பெற்ற மாணவர்கள் மற்றும் Z-Score அடிப்படையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட அநுராதபுர மாவட்ட மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு கடந்த (17) நாச்சியாத்தீவு முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயத்தின் மைதானத்தில் நடைபெற்றது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அநுராதபுர மாவட்ட அமைப்பாளரும், கட்சியின் பிரதி பொருளாளருமான அல்-ஹாஜ். ARM தாரிக் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான Eng. றிஷாட் பதியுதீன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டதுடன். விஷேட பேச்சாளராக மதீனா வித்தியாலய அதிபர் எச்.எம். சஹீட் கலந்துகொண்டார்.

கௌரவ அதிதிகளாக, கட்சியின் தவிசாளரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான எம்.எஸ். அமீர் அலி, கட்சியின் மூத்த பிரதி தலைவரும் முன்னாள் தூதுவருமான சிரேஷ்ட சட்டத்தரணி என்.எம். சஹீட், கட்சியின் பிரதி தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான முத்து முஹம்மட், கட்சியின் பொருளாளர் Dr. மரைக்கார், கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் புத்தளம் மாவட்ட அமைப்பாளருமான என்.ரீ.எம். தாஹீர் மரைக்கார், கட்சியின் சட்ட விவகார பணிப்பாளரும் கொழும்பு மாவட்ட அமைப்பாளருமான சிரேஷ்ட சட்டத்தரணி ருஷ்டி ஹபீப், அம்பாறை மாவட்ட கல்விப்பிரிவு இணைப்பாளர் எஸ்.எம். சபீஸ் உள்ளிட்டோருடன் கட்சியின் உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள், அநுராதபுர மாவட்ட கட்சியின் மத்திய குழு உறுப்பினர்கள், உலமாக்கல், பாடசாலை அதிபர்கள், கட்சியின் முக்கியஸ்தர்கள், பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்கள் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
சிறந்த கல்வி பெறுபேறுகளைப் பெற்று சாதனை படைத்த மாணவர்களின் கல்வி முயற்சிகளைப் பாராட்டி, அவர்களை ஊக்குவிக்கும் வகையில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.


















































































































































































No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.