Page Nav

தலைப்புச் செய்திகள்

latest

செப்டெம்பர் 19 முதல் அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் அனைவருக்கும் ஆசனப் பட்டி அணிவது கட்டாயம்!


அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் அனைத்து வாகன சாரதிகள் மற்றும் பயணிகள் (பின்புற ஆசனங்களில் உள்ளவர்கள் உட்பட) பாதுகாப்பு ஆசனப் பட்டிகளை (Seat belts) அணிவதை செப்டெம்பர் 19 ஆம் திகதி முதல் கட்டாயமாக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தேசிய வீதிப் பாதுகாப்பு சபை தெரிவித்துள்ளது.

கடந்த 2025 ஆகஸ்ட் மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்படவிருந்த இச்சட்டம், பின்புற ஆசனங்களில் பட்டிகள் இல்லாத வாகனங்களுக்கு அவற்றைப் பொருத்திக்கொள்ள கால அவகாசம் வழங்குவதற்காக பலமுறை ஒத்திவைக்கப்பட்டது. ஜூன் 10 ஆம் திகதியுடன் முடிவடையவிருந்த இந்தச் சலுகைக்காலம் பொதுமக்களின் கோரிக்கைக்கு அமைய செப்டம்பர் 19 வரை நீடிக்கப்பட்டது. எனவே, இனி எக்காரணம் கொண்டும் காலநீடிப்பு வழங்கப்பட மாட்டாது எனவும், எதிர்வரும் 19 ஆம் திகதி முதல் சட்டத்தை மீறும் சாரதிகள் மற்றும் பயணிகள் அனைவருக்கும் அபராதம் விதிக்கப்படும் எனவும் தேசிய வீதிப் பாதுகாப்பு சபையின் தலைவர் மஞ்சுள குலரத்ன தெரிவித்தார்.

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். ஆண்டொன்றுக்கு ஏற்படும் 2,500 க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் சொத்து சேதங்களைக் குறைப்பதே இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் பிரதான நோக்கமாகும்.

இச்சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த வீதிப் பாதுகாப்பு, போக்குவரத்து மற்றும் கட்டுப்பாட்டுப் பிரிவின் பணிப்பாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மனோஜ் ரணகல குறிப்பிடுகையில், "மணிக்கு 100 கிலோமீற்றர் வேகத்தில் பயணிக்கும் அதிவேக நெடுஞ்சாலைகளில் ஏற்படும் விபத்துக்களின் போது ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க, முன் மற்றும் பின் ஆசனங்களில் இருப்பவர்கள் பட்டி அணிவது அத்தியாவசியமாகும். எதிர்வரும் 19 ஆம் திகதி முதல் அதிவேக நெடுஞ்சாலைக்குள் நுழையும் அனைத்து வாகனங்களும் பொலிஸாரால் தீவிரமாகப் பரிசோதிக்கப்படும்" எனத் தெரிவித்தார்.

இந்த ஊடக சந்திப்பில் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் விபத்துப் பிரிவின் முன்னாள் பிரதம வைத்திய அதிகாரி மற்றும் நெவில் பெர்னாண்டோ வைத்தியசாலையின் சிரேஷ்ட விசேட வைத்தியர் நரேந்திர பின்டோ உள்ளிட்ட வீதிப் பாதுகாப்புத் தொடர்பான மருத்துவ நிபுணர்களும் கலந்துகொண்டனர்.

பொதுமக்களுக்கான விசேட அறிவித்தல்:

அதிவேக நெடுஞ்சாலைகள் மற்றும் சாதாரண வீதிகளில் சாரதிகள் ஏதேனும் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்டால், அது தொடர்பில் முறைப்பாடு செய்ய விசேட Whatsapp இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் தமது முறைப்பாடுகளை நேரடியாக பொலிஸ் போக்குவரத்து தலைமையகத்திற்கு 070-4755600 என்ற Whatsapp இலக்கத்தின் ஊடாக அனுப்பி வைக்கலாம்.






No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.