Page Nav

தலைப்புச் செய்திகள்

latest


அமெரிக்காவுக்கு வலிமிகுந்த தாக்குதல் வழங்கப்படும் - ஈரான் எச்சரிக்கை


அமெரிக்கா மீண்டும் தாக்குதல்களைத் தொடங்கினால், அமெரிக்க நிலைகள் மீது நீண்ட மற்றும் வலிமிகுந்த தாக்குதல்கள் மூலம் பதிலடி கொடுப்போம் என ஈரான் இன்று (30) அறிவித்துள்ளது. இது ஹோர்முஸ் நீரிணையை திறப்பதற்கான சர்வதேசக் கூட்டணியை உருவாக்குவதற்கான அமெரிக்கத் திட்டங்களைச் சிக்கலாக்கியுள்ளதாக ரொயிட்டர்ஸ் செய்தி வௌியிட்டுள்ளது.

ஈரான் மீதான அமெரிக்க - இஸ்ரேலிய தாக்குதல்களுடன் தொடங்கிய போர் இரண்டு மாதங்களைக் கடந்தும், முக்கிய கடல் பாதையான நீரிணை மூடப்பட்டே உள்ளது. இது உலகின் 20% எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தைத் தடுத்துள்ளது. இதனால் உலகளாவிய எரிசக்தி விலைகள் உயர்ந்துள்ளதுடன் பொருளாதார வீழ்ச்சிக்கான அபாயங்கள் குறித்த கவலைகளையும் அதிகரித்துள்ளன.

மோதலைத் தீர்ப்பதற்கான முயற்சிகள் முட்டுக்கட்டையைச் சந்தித்துள்ளன, ஏப்ரல் 8 முதல் போர்நிறுத்தம் நடைமுறையில் உள்ளது.

ஆனால் ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியை, அமெரிக்க கடற்படை முற்றுகையிட்டதற்குப் பதிலடியாக ஈரான் இன்னும் நீரிணையை தடுத்து வருகிறது. அணுசக்தி விவகாரங்களில் பேச்சுவார்த்தைகளில் ஈரானை மிகவும் நெகிழ்வானதாக மாற்றும் நம்பிக்கையில், ஈரான் மீது புதிய இராணுவத் தாக்குதல்களை நடத்துவதற்கான திட்டங்கள் குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆலோசிப்பதாக கூறப்பட்டது.

இது எண்ணெய் விலையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.