திறைசேரியின் 2.5 மில்லியன் டொலர் மாயமான சம்பவம் தொடர்பில் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ள நிதியமைச்சின் 4 அதிகாரிகளில் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தார். நிதியமைச்சின் வௌிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் உதவி பணிப்பாளராக செயற்பட்ட ரங்க ராஜபக்ஷ என்பவரே இவ்வாறு உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
2.5 மில்லியன் அமெரிக்க டொலர் ஹெக்கர்களால் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில், இவருடன் சேர்த்து நான்கு அதிகாரிகளைப் பணியிடைநீக்கம் செய்ய நிதி அமைச்சு அண்மையில் நடவடிக்கை எடுத்திருந்தது.
இதேவேளை, இச்சம்பவம் குறித்து வாக்குமூலம் அளிப்பதற்காகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு இரண்டு தடவைகள் இந்த அதிகாரிக்கு அறிவிக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
இருப்பினும், அந்த இரண்டு சந்தர்ப்பங்களிலும் அவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகவில்லை.
ரங்க ராஜபக்ஷ குளியாப்பிட்டிய மத்திய மகா வித்தியாலயத்தின் பழைய மாணவனும், ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பழைய மாணவனும் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது

No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.