மின்சார உற்பத்தி, கடத்துகை மற்றும் விநியோகத்திற்காக ஏற்படும் நியாயமான செலவுகளை மட்டுமே மின்சாரக் கட்டணத் திருத்தங்களின் போது கருத்திற் கொள்ள இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி அளித்துள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு ஆணைக்குழு இதனை தெரிவித்துள்ளது.
அண்மைய மின்சாரக் கட்டணத் திருத்தத் தீர்மானத்தின் போது, நிலக்கரி நிலைமை காரணமாக ஏற்பட்ட மேலதிக செலவுகள் அல்லது வேறு ஏதேனும் நியாயமற்ற செலவுகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. அத்துடன், எதிர்கால மின்சாரக் கட்டணத் திருத்த முன்மொழிவுகளிலிருந்தும் நிலக்கரி நெருக்கடி தொடர்பான மேலதிக செலவுகள் அல்லது ஏனைய நியாயமற்ற செலவுகளை நீக்குவதற்கு ஆணைக்குழு ஏகமனதாகத் தீர்மானித்துள்ளது.

No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.