Page Nav

தலைப்புச் செய்திகள்

latest

பஸ்ஸில் அதிக கட்டணம் அறவிடப்பட்டால் உடன் அறிவியுங்கள்


நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிகக் கட்டணம் அறவிடப்படும் பேருந்துகள் குறித்து 1955 என்ற இலக்கத்திற்கு முறைப்பாடு செய்யுமாறு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு பயணிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அந்த ஆணைக்குழுவின் செயற்பாட்டு பணிப்பாளர் ஷெரின் அத்துகோரல இதனைத் தெரிவித்துள்ளார்.

பண்டிகைக் காலங்களில் அனுமதிப்பத்திரம் இன்றி பயணிகளை ஏற்றிச் செல்லும் பேருந்துகள் இருக்கக்கூடும் எனவும், அத்தகைய பேருந்துகள் பயணிகளைச் சுரண்ட வாய்ப்புள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறு அனுமதிப்பத்திரம் இன்றி கொழும்பிலிருந்து பயணத்தை ஆரம்பிக்கத் தயாராக இருந்த 7 பேருந்துகளை நேற்று (11) சட்டத்தின் பிடியில் சிக்கவைக்க முடிந்ததாக அவர் கூறினார்.

அந்தப் பேருந்துகள் அந்த இடத்திலேயே நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.