Page Nav

தலைப்புச் செய்திகள்

latest


ஈரான் - அமெரிக்க அமைதிப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை


ஈரானுடனான அமைதிப் பேச்சுவார்த்தையில் அமெரிக்கா நன்நோக்கத்துடனே கலந்துகொண்டதாக அமெரிக்கத் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் 12 மணித்தியாலங்களுக்கும் மேலாக நீடித்த இந்தப் பேச்சுவார்த்தையின் பின்னர், முதன்முறையாக ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் நிபந்தனைகளுக்கு ஈரான் உடன்படவில்லை என்றும், இரு நாடுகளுக்கும் இடையில் எவ்வித இணக்கப்பாடும் எட்டப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஈரானின் அணுஆயுதத் திறனைத் தடுப்பதே தமது பிரதான இலக்காகும் எனத் தெரிவித்த துணை ஜனாதிபதி, பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததையடுத்து அமெரிக்கத் தூதுக்குழுவினர் பாகிஸ்தானிலிருந்து வெளியேறத் திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார். இருப்பினும், இந்தப் பேச்சுவார்த்தையில் மத்தியஸ்தராகச் செயற்பட்ட பாகிஸ்தானுக்கு அவர் தனது நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.