Page Nav

தலைப்புச் செய்திகள்

latest


டித்வா இழப்பீடு தொடர்பான புதிய தீர்மானம்


டித்வா புயல் காரணமாக பாதிக்கப்பட்ட வீடுகள் மற்றும் வணிகக் கட்டிடங்களுக்கு இழப்பீடு வழங்குவதற்காக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் விசேட திட்டமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
இத்திட்டத்தின் கீழ், பாதிக்கப்பட்ட இடங்கள் முக்கியமாக அதி அபாயகரமானவை, மத்திய அபாயகரமானவை மற்றும் குறைந்த அபாயகரமானவை என மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

அதனைத் தொடர்ந்து, அதி அபாயகரமான பிரிவின் கீழ் உள்ள வீடுகள் மீண்டும் முன்னுரிமை 1, முன்னுரிமை 2 மற்றும் முன்னுரிமை 3 என துணைப் பிரிவுகளாக வகைப்படுத்தப்படும்.

இந்த முன்னுரிமைப் பட்டியலின் அடிப்படையிலேயே இழப்பீடு வழங்கப்படும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

அதி அபாய வலயத்தில் உள்ள அனைவரும் மீளக் குடியேற்றப்பட்ட போதிலும், அரசாங்கத்தினால் வழங்கப்படும் நிதியை வினைத்திறனாகப் பகிர்ந்தளிப்பதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நீங்கள் எந்த முன்னுரிமைப் பிரிவைச் சேர்ந்தவர் என்பதை அந்தந்தப் பிரதேச செயலகத்தின் ஊடாக அறிந்துகொள்ள முடியும்.

ஒரு நிலப்பரப்பு ஒரே நேரத்தில் பரிசோதிக்கப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டாலும், முன்னுரிமை வரிசைப்படியே இழப்பீடு வழங்கப்படும்.

இதன் காரணமாக, உங்கள் அயலவருக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டாலும், முதற்கட்டமாக உங்களுக்கு அந்த நிதி கிடைக்காமல் போகலாம் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.