வாக்குறுதிகளை அளித்தவர்கள் வாக்குறுதியை நிறைவேற்றாத போது

இன்று (04/11/2019) மசாஹிமாவின் தர்மச்சக்கர வழக்கு” மஹியங்கனை நீதவான் நீதிமன்றில் விளக்கத்திற்காக எடுக்கப்பட்ட போது கசக்கல பொலிஸ் பொறுப்பதிகாரி (OIC)”சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனை எமக்கு கிடைக்கவில்லை” எனும் வழமையான பல்லவியை பாடினார்.

நாம் வாக்குறுதி அளித்தபடி மசாஹிமாவுக்காக மன்றில் தோன்றி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மீதான தகவல்களை அறிவித்ததுடன் , சட்டமா அதிபரின் ஆலோசனையை பெற்றுக்கொள்வதற்கான இறுதி திகதியை வழங்குமாறு கேட்டுக்கொண்டோம். 

அதற்கிணங்க நீதவான் வழக்கை எதிர்வரும் 18/05/2020 ற்கு ஒத்திவைத்தார். அல்ஹம்துலில்லாஹ். 

சரி விடயத்திற்கு வருகிறோம். 

மசாஹிமாவின் கைது மற்றும் விடுதலையின் பின் நூற்றுக்கணக்கான உள்நாட்டு வெளிநாட்டு தனவந்தர்கள் எமக்கு மற்றும் மசாஹிமாவின் குடும்பத்திற்கு call பண்ணி அவர்களுக்கான வீட்டுத்தேவையை பூர்த்தி செய்வதாக வாக்குறுதிகளை அளித்திருந்தனர். 

வாக்குறுதியளித்தவர்களில் சதகா பவுண்டேஷனால் வழங்கப்பட்ட உதவியினால்  வீட்டின் அரைவாசி வேலையை மசாஹிமா குடும்பம் முடித்துள்ளனர். 

வாக்குறுதிகளை நம்பி ஆரம்பித்த வீட்டு வேலைகளை முடித்துக்கொள்ள முடியாமல் மழையில் நனைந்து விரக்தியின் உச்சிக்கே வந்த மசாஹிமா குடும்பம் இன்று நீதிமன்ற வளாகத்தில் கண்கலங்கி நின்றது. 

“எமது சமூகம் கண்கலங்குவது” எமக்கு பிடிக்காத விடயமென்பதால் எவரிடம் கேட்டால் உடனடி தீர்வு கிடைக்கும் என்பது எமக்கு தெளிவிருந்தமையால் எனது நண்பன் அமைச்சர் ரிஷாத்திற்கு தொலைபேசி மூலம் விபரங்களை கூறிய போது உடனடியாக ரூ.200,000/ வை எனது வங்கிக்கணக்கிற்கு அனுப்பி அப்பணம் உடனடியாக என்னால் மசாஹிமாவிடம் வழங்கப்பட்டது. 

அல்ஹம்துலில்லாஹ் ! சற்றும் எதிர்ப்பாக்காமல் கிடைத்த உதவியை ஆனந்தக்கண்ணீருடன் பெற்றுக்கொண்ட மசாஹிமா குடும்பம் எமக்காகவும் நண்பன் ரிஷாத்திற்காகவும் துஆ செய்தது. 

இறைவனின் உதவியால் நாம் கொடுத்த வாக்குறுதிகளுக்கு (இலவசமாக வழக்காடுதல்) மேலதிகமானவைகளையும் நிறைவேற்றிக்கொண்டிருக்கிறோம். 

ஆனால் வாக்குறுதிகளை அள்ளி வழங்கிய நீங்கள் ??!!! 

அல்லாஹ்வுக்கு பயந்துக்கொள்ளுங்கள். 

சட்டத்தரணி சறூக் -கொழும்பு




Share on Google Plus

About BY AZEEM KILABDEEN

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துகள்:

Post a Comment