- பாறுக் ஷிஹான் -
அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை நிந்தவூர் எல்லையை அண்டிய நீரேந்துப் பகுதியை நோக்கி ஊடுருவிய காட்டு யானைகளின் நடமாட்டத்தினால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.
ஊடுருவும் காட்டு யானைகள் அயலிலுள்ள காடுகளுக்குள் இருந்து குறித்த பகுதி கிராமங்களுக்குள் கடந்த சனிக்கிழமை(21) முதல் தொடர்ச்சியாக கிரமங்களுக்குள் வந்து சேதம் விளைவித்து வந்ததாக மக்கள் தெரிவித்தனர்.
இக் காட்டு யானைகள் ஊருக்குள் ஊடுருவுவதைத் தடுப்பதற்காக ஊர்ப் பகுதியைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள சில யானை தடுப்பு மின்சார வேலிகள் செயலிழந்துள்ளதுடன் ஊடுருவியுள்ள காட்டு யானைகள் கூட்டம் வீட்டு மதிலினை உடைத்து சேதம் விளைவித்ததோடு பயன்தரும் பயிர்களையும் மரங்களையும் துவம்சம் செய்து சென்றுள்ளன.
காட்டு யானைகள் ஏற்படுத்தும் சேதம் தொடர்பாக கிராம சேவையாளரிடமும் பொலிஸாரிடமும் கிராம மக்கள் அறிவித்துள்ளனர்.

No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.