முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் கிழக்கு மாகாண கல்விதிணைக்களம் ஏற்பாடு செய்த மீலாதுன் நபி விழா வைபவம் ஞாயிற்றுக்கிழமை(22) கல்முனை மஹ்மூத் மகளீர் கல்லூரி சேர் ராசீக் பரீட் மண்டபத்தில் நடை பெற்றது.
மாகாண கல்விப்பணிப்பாளர் எம்.கே.எம் மன்சூர் கலந்து கொண்ட இவ் வைபவத்தில் கிழக்கு மாகாணத்தில் உள்ள திருகோணாமலை மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் உள்ள 17 வலயக் கல்வி அலுவலக மாணவர்கள் கலந்து கொண்டனர் .
மூன்று மாவட்டத்திலும் உள்ள வலய கல்விப்பணிப்பாளர்கள் ,பிரதி கல்விப் பணிப்பாளர்கள், உதவி கல்விப் பணிப்பாளர்கள்,கோட்டக்கல்விப் பணிப்பாளர்கள் , ஆசிரிய ஆலோசகர்கள்,அதிபர்கள்,ஆசிரியர் கள் ,பெற்றோர்கள் என ஏராளமானோர் வைபவத்தில் கலந்து கொண்டனர்.
மாணவர்களின் கலை கலாச்சார நிகழ்வுகள் இங்கு இடம் பெற்றதோடு போட்டிகளில் பங்கு பற்றி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி வைக்கப்பட்டது .
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.