Page Nav

தலைப்புச் செய்திகள்

latest

அரச உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் ஹிஜாப் அணிய முழு உரிமை: மீறல்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க அழைப்பு



அரசு மற்றும் சுகாதாரத் துறைகளில் பணியாற்றும் முஸ்லிம் பெண் தாதியர்கள் மற்றும் சிற்றூழியர்கள் தங்களது மத வழக்கத்தின்படி ஹிஜாப் அணிவதற்கு முழுமையான சட்டபூர்வ உரிமை உள்ளதாகவும், இதற்கு எவ்விதத் தடைகளும் இல்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சிறுவயது முதலே ஹிஜாப் அணிந்து வரும் சகோதரிகளைப் பார்த்து அதனை கழற்றுமாறு கூற எவருக்கும் எவ்வித உரிமையோ அருகதையோ கிடையாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை பொது நிர்வாக அமைச்சினால் 2019 ஜூன் 26 ஆம் திகதி வெளியிடப்பட்ட 13/2019 (I) இலக்க சுற்றறிக்கையின்படி (Public Administration Circular 13/2019(I) – Attire of Public Officers), அரச உத்தியோகத்தர்கள் தங்களது மத மற்றும் கலாசார சம்பிரதாயங்களுக்கு அமைவான மேலதிக ஆடைகளை அணிய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைய, உத்தியோகத்தர்கள் தங்களுடைய மத அடையாளத்தைப் பேணும் வகையில் வழக்கமான உத்தியோகபூர்வ ஆடையுடன் மேலதிக ஆடையை (ஹிஜாப்) அணியலாம். எனினும், முகம் தெளிவாக அடையாளம் காணக்கூடிய வகையில் அந்த ஆடை அமைந்திருக்க வேண்டும் என குறித்த சுற்றறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இலங்கையில் எவ்விடத்திலேனும் ஆடை விடயத்தில் உரிமை மறுக்கப்பட்டால் அல்லது ஹிஜாபை அகற்றுமாறு வற்புறுத்தப்பட்டால், பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக நீதிமன்றத்தை நாடி அகிம்சா வழியில் தங்களது உரிமையை உறுதிப்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். அத்துடன், இவ்வாறான உரிமை மீறல் சம்பவங்களைத் தாமதிக்காமல் பொதுவெளியில் பகிரங்கப்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. உங்களது உரிமை மீறப்படும்போது அதற்கெதிராக நீங்கள் துணிந்து குரல் கொடுக்கத் தவறினால், அது மற்றுமொருவரின் உரிமை மீறலுக்கும் வழியேற்படுத்திவிடும் என்பதால், தங்களது சட்டப்பூர்வ உரிமைகளைப் பாதுகாப்பதில் விழிப்புடன் செயற்பட வேண்டும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.