நிலவும் சீரற்ற வானிலை காரணமாகக் களனி கங்கையை அண்மித்த பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட வௌ்ள அபாய எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. முதலாம் கட்டத்தின் நேற்று முன்தினம் இந்த வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. அந்த அறிவித்தல் அடுத்த 48 மணித்தியாலங்கள் வரை நீடிக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய, குறித்த அறிவித்தல் 5 ஆம் திகதி காலை 11.30 மணி வரை செல்லுபடியாகும் என அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இந்நிலைமை தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு அப்பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
இதனிடையே, அப்பகுதிகள் ஊடான உப வீதிகளில் பயணிக்கும் சாரதிகளும் அவதானமாக வாகனங்களைச் செலுத்துமாறு குறித்த அறிவித்தலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.