இன்று காலை 5.30 மணியளவில் கேகாலை, கரடுப்பனை சந்தியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு (இ.போ.ச) சொந்தமான பேருந்தொன்றும் தனியார் பேருந்தொன்றும் மோதிக் கொண்டதில் 18 பயணிகள் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இ.போ.ச பேருந்து ரம்புக்கனையிலிருந்து கண்டி நோக்கியும், தனியார் பேருந்து திகனையிலிருந்து கொழும்பு நோக்கியும் பயணித்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. காயமடைந்தவர்களில் 15 பெண்களும் 3 ஆண்களும் அடங்குவர். இவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட எவரும் கவலைக்கிடமான நிலையில் இல்லை என பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். விபத்துக்கான காரணம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.