வெற்றிகரமான புத்தாக்கங்களுக்கு அங்கீகாரம் வழங்குவதும், அவற்றை நாட்டின் தேசிய பெறுமதிகளாக மாற்றுவதற்கான சூழலை உருவாக்குவதுமே அரசாங்கத்தின் பிரதான நோக்கமாகும் என விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன தெரிவித்தார்.
விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய புத்தாக்க முகவர் அமைப்பினால் (National Innovation Agency - NIA) தயாரிக்கப்பட்ட 2025 மற்றும் 2026 ஆம் ஆண்டுகளுக்கான ‘தேசிய புத்தாக்க அறிக்கைகள்’ வெளியீட்டு விழா இன்று பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட 70க்கும் அதிகமான உண்மை புத்தாக்க முன்மாதிரிகள் இந்த இரு அறிக்கைகளிலும் உள்ளடக்கப்பட்டுள்ளன. வெறும் எண்ணக்கருக்கள் அல்லது புதிய கண்டுபிடிப்புகளாக மட்டும் நின்றுவிடாமல்; தயாரிப்புகள், சேவைகள், புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் வணிகங்களாக வெற்றிகரமாக மாற்றமடைந்து, வருமானத்தை ஈட்டி தேசிய பொருளாதாரத்திற்கு பங்களிப்பு செய்யும் நிஜ வெற்றிக் கதைகள் இதில் விவரிக்கப்பட்டுள்ளன. இலங்கையின் புத்தாக்க சூழலின் நிலை, அதன் முன்னேற்றம் மற்றும் தேசிய வளர்ச்சிக்கு புத்தாக்கங்கள் வழங்கும் பங்களிப்பை தேசிய மட்டத்தில் வெளிப்படுத்துவதே இவ்வறிக்கையின் பிரதான நோக்கமாகும்.
இந்நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன:
"தேசிய வளர்ச்சிக்கு புத்தாக்கம் மிகவும் இன்றியமையாதது. புத்தாக்கங்கள் மூலம் உற்பத்தித்திறனை உயர்த்துவதற்கும், புதிய தொழில்துறைகள் மற்றும் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கும், பொதுச் சேவைகளை பலப்படுத்துவதற்கும் நாம் வழியமைக்கின்றோம். அத்துடன் பொருளாதார, சமூக மற்றும் சுற்றுச்சூழல் சவால்களை வெற்றிகரமாக எதிர்கொள்ளக்கூடிய தீர்வுகளாக அவற்றை மாற்றியமைக்க வேண்டும். இதற்கு இலங்கையில் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்ட முறையான புத்தாக்க சூழலமைப்பு அவசியமாகும்."
தேசிய புத்தாக்க முகவர் அமைப்பினால் நடைமுறைப்படுத்தப்படும் புத்தாக்க வவுச்சர் (Innovation Vouchers Programme) திட்டத்தின் கீழ், முதல் கட்ட வவுச்சர்கள் வழங்கும் நிகழ்வும் இதன் போது இடம்பெற்றது. புத்தாக்கங்களை வணிகமயமாக்கும் பயணத்தில் ஆராய்ச்சியாளர்களும் கண்டுபிடிப்பாளர்களும் எதிர்கொள்ளும் தொழில்நுட்ப மற்றும் ஏனைய தடைகளைத் தகர்ப்பதற்கு இந்த வவுச்சர் திட்டம் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிதி ஆதரவை வழங்குகிறது. இதற்கமைய, தெரிவு செய்யப்பட்ட 11 வெற்றியாளர்களுக்கு (தனிநபர்கள் மற்றும் குழுக்கள் உட்பட) நிதியுதவி வவுச்சர்கள் அமைச்சராலும் அமைச்சின் செயலாளராலும் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் பதில் செயலாளர் மகேஷ் கம்மன்பில, சுற்றாடல் அமைச்சின் செயலாளர் ரோஹித உடுவாவல, தேசிய புத்தாக்க முகவர் அமைப்பின் பிரதம புத்தாக்க அதிகாரி கலாநிதி முதித சேனரத் யாபா உட்பட அமைச்சின் அதிகாரிகள் மற்றும் துறைசார் நிபுணர்கள் பலர் கலந்துகொண்டனர்.

No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.