Page Nav

தலைப்புச் செய்திகள்

latest

கௌரவ சுகாதார அமைச்சரின் கருத்து ஏற்புடையது அல்ல.


கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் காதார உதவியாளராக கடமையாற்றுவதற்கு தகுதி வாய்ந்த அதிகாரியால் நியமிக்கப்பட்ட இஸ்லாம் மதத்தை பின்பற்றும் சகோதரிகள் தங்களுடைய பதவிக்கு கடமையாக்கப்பட்ட சீருடைக்கு மேலதிகமாக அவர்கள் பின்பற்றும் மார்க்கத்தின் (மதத்தின்) அடிப்படையில் ஆடை அணிந்து தங்களது கடமைகளை மேற்கொள்வதற்கு குறித்த வைத்தியசாலை நிர்வாகம் தடை விதித்தமை குறித்து கௌரவ #சுகாதார_அமைச்சர் அவர்களிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு அவருடைய பதில் மிகவும் மட்டமானது.

* குறித்த துறைக்கு பொறுப்பான அமைச்சர் எனும் வகையிலும்..

* இலங்கை அரசாங்கத்தின் அமைச்சரவை பேச்சாளர் எனும் வகையிலும்..

* தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தில் பலம் வாய்ந்த அதே நேரம் புலமைத்துவ பின்புலம் உள்ள ஒரு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் எனும் வகையிலும்

* மேலும் அவர் ஒரு வைத்தியர் எனும் வகையிலும்..

அவருடைய பதில் ஏற்புடையது அல்ல.

குறித்த விடயம் சம்பந்தமாக நேற்றைய அமைச்சரவை செய்திகளை அறிவிக்கும் பத்திரிகையாளர் மாநாட்டில் #shortnews இணையதளத்தின் ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு..

இதுகுறித்து செய்தி ஊடகங்களில் தான் நான் அறிந்து கொண்டேன்.

இதுவரை அரசாங்கத்திற்கு விதமான உத்தியோகபூர்வ முறைப்பாடுகளும் கிடைக்கப் பெறவில்லை...

கிடைத்தால் அது குறித்து நடவடிக்கை எடுப்போம்...

நம் தொனியில் பதில் தந்தார்..

நான் மேலே சொன்ன அவ்வளவு சிறப்பு தகுதிகளை கொண்ட கௌரவ அமைச்சர் அவ்வாறு பதிலளிப்பது ஏற்புடையதாகுமு என்பதை யோசித்துப் பாருங்கள்..

76 வருட கால நாட்டின் சீரழிந்த முறைமையினை சீர்படுத்தி ஒரு புதிய முறைமை மாற்றத்தை #சிஸ்டம்சேஞ் ஏற்படுத்துவதற்கு வந்த தேசிய மக்கள் கட்சி அரசாங்கம் இவ்வாறு பேசுவது மிகவும் வருத்தம் அளிக்கிறது.

இந்த ஆடை மறுப்பு குறித்து பின்வரும் தெளிவான சட்ட நிலைப்பாடுகள் இருக்கிறது

*அரசியலமைப்பின் உறுப்பரை 10 ,12(1), (2) மற்றும் 14(1) ( e) (f)

* 13/ 2019 எனும் இலக்கம் கொண்ட பொது நிர்வாக அமைச்சின் #சுற்றறிக்கை

* 01-33/2012 எனும் இலக்கம் கொண்ட பொது நிர்வாக அமைச்சு மற்றும் சுகாதார அமைச்சின் #சுற்றறிக்கை

* 5/2022 எனும் இலக்கம் கொண்ட பொது நிர்வாக அமைச்சின் #சுற்றறிக்கை

குறித்த சுற்றறிக்கைகள் அலுவலக கண்ணியத்தை பேணும் பொதுச்சேவையின் மரியாதையை கண்ணியத்தை பாதுகாக்க கூடிய நாகரிகமான உடைகளையும் மத நம்பிக்கைகளுக்கு இணைந்த வகையில் ஆடைகளையும் குறிப்பாக பொதுச் சுகாதாரத்துறை ஊழியர்கள் தங்களுடைய பதவிக்குரிய ஆடைகளுக்கு மேலதிகமாக தங்களுடைய கலாச்சாரத்தை மதத்தை பிரதிபலிக்க கூடிய ஆடைகளை அணியவும் வழி வகுக்கின்றது.

இவ்வளவு தெளிவான சட்ட நிலைபாடுகள் இருக்கும் நிலையில் சம்பந்தப்பட்ட அமைச்சராக இருந்து கொண்டு இவ்வாறு பதிலளித்தமை மிகவும் மன வருத்தமானது.

அதேநேரம் அரசாங்கத்திற்கு எதிரான சக்திகளால் இந்த விடயம் நடைமுறைப்படுத்தப்படுமாக இருந்தால் அது குறித்து அரசாங்கத்தின் அணுகுமுறை இவ்வாறு இருக்கக்கூடாது.

இந்த #ஆடைமறுப்பு சுற்றி நிருபங்களுக்கு உட்பட்டதா என்பதை பார்க்கிலும் இது இலங்கையினுடைய #அரசியலமைப்பினால் உறுதிப்படுத்தப்பட்ட அடிப்படை மனித உரிமைகளோடு சம்பந்தப்பட்டது எனும் சீரியஸ் இல்லாமல் அமைச்சர் பேசுவது சந்தேகத்தை தோற்றுவிக்கிறது.


முஸ்லிம்களின் மீதான இந்த அரசாங்கத்தின் அணுகுமுறை குறித்து இலங்கை முஸ்லிம்கள் சிந்திக்க வேண்டிய ஒரு அவசரத்தையும் அவசியத்தையும் அரசாங்கத்தின் அணுகுமுறைகள் இலங்கை முஸ்லிம்களுக்கு தோற்றுவிக்கிறது.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.