Page Nav

தலைப்புச் செய்திகள்

latest

நாட்டில் இதுவரை 86,000 டெங்கு நோயாளர்கள் பதிவு: 62 பேர் பலி


வருடத்தின் ஆரம்பம் முதல் இதுவரை நாட்டில் பதிவான ஒட்டுமொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 86,000 ஆகப் பதிவாகியுள்ளது. தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு வெளியிட்டுள்ள புதிய அறிக்கையிலேயே இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இந்த ஆண்டில் இதுவரை இல்லாதவாறு அதிகளவிலான டெங்கு நோயாளர்கள் கடந்த ஜூலை மாதத்திலேயே பதிவாகியுள்ளதுடன், அந்த எண்ணிக்கை 29,980 ஆக பதிவாகியுள்ளது.

இதனிடையே, ஓகஸ்ட் மாதத்தில் கடந்துசென்ற இரு நாட்களில் 646 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.


இவர்களில் அதிகளவிலான நோயாளர்கள் மேல் மாகாணத்தின் கம்பஹா மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இதன்படி, கம்பஹா மாவட்டத்தில் பதிவாகியுள்ள நோயாளர்களின் எண்ணிக்கை 18,249 ஆகும்.

இரண்டாவதாக அதிகளவிலான நோயாளர்கள் கொழும்பு மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளதுடன், அந்த எண்ணிக்கை 17,048 ஆகக் குறிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறாக நோயாளர்கள் பதிவாகிவரும் பின்னணியில், டெங்கு நோய் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 62 ஆகப் பதிவாகியுள்ளதுடன், 137 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் அதிஅபாய வலயங்களாகத் தொடர்ந்து காணப்படுவதாகவும் தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு குறித்த அறிக்கையின் மூலம் சுட்டிக்காட்டியுள்ளது.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.