Page Nav

தலைப்புச் செய்திகள்

latest


நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு: சிபெட்கோ அறிவிப்பு


இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இன்று (02) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளைத் திருத்தியமைத்துள்ளது.

திருத்தப்பட்ட புதிய விலைகளின் விபரங்கள் பின்வருமாறு:

லங்கா ஓட்டோ டீசல்: 10.00 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், அதன் புதிய விலை 392.00 ரூபாவாகும்.

லங்கா சூப்பர் டீசல் 4 ஸ்டார் யூரோ 4: 15.00 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், அதன் புதிய விலை 458.00 ரூபாவாகும்.

லங்கா பெற்றோல் 95 ஒக்டேன் யூரோ 4: 15.00 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், அதன் புதிய விலை 470.00 ரூபாவாகும்.

லங்கா பெற்றோல் 92 ஒக்டேன்: 12.00 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், அதன் புதிய விலை 410.00 ரூபாவாகும்.

லங்கா மண்ணெண்ணெய்: 10.00 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், அதன் புதிய விலை 265.00 ரூபாவாகும்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.