ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் உள்ளிட்ட அக்கட்சியின் முக்கியஸ்தர்கள் சிலர் இன்று (13) குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு ஒன்றை அளித்துள்ளனர். நிலக்கரிக்கான விலை மனு கோரலில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்துமாறு கோரியே இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த விலை மனுவை ஜனாதிபதிக்கு நெருக்கமான ஒருவருக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட விதம் தொடர்பான குரல் பதிவு ஒன்று வெளியாகியுள்ளதாகத் தெரிவித்து, இந்த முறைப்பாட்டை அவர்கள் சமர்ப்பித்துள்ளனர்.
இது குறித்து பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கருத்து தெரிவிக்கையில், ஒரு குரல் பதிவு வெளியாகியுள்ளது. அதைக் கேட்கும்போது அங்கேயும் ஒரு மோசடி நடந்துள்ளது என்பது புரிகிறது. ஜனாதிபதிக்கு மிக நெருக்கமான ஒருவருக்கு இந்த டெண்டரை வழங்க வேண்டும் என்பது தொடர்பான கலந்துரையாடல் அந்த குரல் பதிவில் உள்ளது.
எனவே, அந்த குரல் பதிவு மற்றும் அதில் இடம்பெற்றுள்ள விடயங்கள் குறித்து உடனடியாக விசாரணை நடத்துமாறு கோரி இன்று குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளோம். அந்த குரல் பதிவில் ஜனாதிபதியின் பெயர் மற்றும் அவருக்கு மிக நெருக்கமான தொழிலதிபர்களின் பெயர்கள் குறிப்பிடப்படுகின்றன.
இதன் மூலம் அங்கேயும் தெளிவாக ஒரு மோசடி நடந்துள்ளது என்பது உறுதியாகிறது.
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.