Page Nav

தலைப்புச் செய்திகள்

latest


ஆட்பதிவுத் திணைக்களம் பொது மக்களுக்கு முக்கிய அறிவிப்பு



ஆட்பதிவுத் திணைக்களத்தின் கணினி கட்டமைப்பை வழமைக்குக் கொண்டுவரும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக அத்திணைக்களம் தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக ஆட்பதிவுத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் எம்.எஸ்.பி. சூரியப்பெரும விடுத்துள்ள அறிக்கையில், அத்தியாவசியத் தேவை உடையவர்களுக்கு மாத்திரம் நாளை (08) முதல் ஒருநாள் சேவை மூலம் பிரதான அலுவலகம் மற்றும் மாகாண அலுவலகங்களில் தேசிய அடையாள அட்டைகளை விநியோகிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

 

அத்துடன், அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு வழங்கப்படும் தேசிய அடையாள அட்டை தகவல்களை உறுதிப்படுத்துதல் மற்றும் ஆங்கில மொழிபெயர்ப்பு உள்ளிட்ட ஏனைய சேவைகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. 

 

எனவே, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் இதற்காக மாற்று வழிகளைக் கையாளுமாறு திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது. 

 

இதற்கமைய, பிரதான அலுவலகம் மற்றும் மாகாண அலுவலகங்களின் சாதாரண சேவை மற்றும் முன்வரிசை அலுவலகச் செயற்பாடுகள்  மறு அறிவித்தல் வரை இயங்காது எனவும், கணினி கட்டமைப்பு சீர்செய்யப்பட்ட பின்னர் அனைத்துச் சேவைகளும் தடையின்றி முன்னெடுக்கப்படும் எனவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.