Page Nav

தலைப்புச் செய்திகள்

latest


கொழும்பின் பல பகுதிகளில் 12 மணித்தியால நீர்வெட்டு



தற்போது நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக, இன்று (07) கொழும்பின் பல பகுதிகளில் நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இதன்படி பெலன்வத்தை, சித்தமுல்ல, எரவவல, நிவன்திடிய, போகுந்தர வீதி, ரத்மல்தெனிய, மஹரகம - பிலியந்தலை வீதி, மொரகெட்டிய வீதி, ஹிரிபிட்டிய, கொரகபிட்டிய வீதி, நியதகல வீதி, தொலேகடே சந்தி, குடமாதுவ 255 பஸ் வீதியின் வயல் பகுதி வரை மற்றும் புபுது மாவத்தை 255 பஸ் வீதியின் வயல் பகுதி வரை ஆகிய பிரதேசங்களில் இன்று (07) இரவு 8.00 மணி முதல் நாளை (08) காலை 8.00 மணி வரை நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளது.

நீரேந்துப் பகுதிகள் மூலம் இயங்கும் லபுகம மற்றும் கலடுவாவ நீர் சுத்திகரிப்பு நிலையங்களின் நீர் மட்டம் வேகமாக வீழ்ச்சியடைந்து வருவதால், உற்பத்தி மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் காரணமாகவே குறித்த சுத்திகரிப்பு நிலையங்கள் மூலம் நீர் விநியோகிக்கப்படும் மேற் குறிப்பிட்ட பகுதிகளில் நீர் விநியோகத்தைக் கட்டுப்படுத்த நேரிட்டுள்ளதாக அந்தச் சபை மேலும் தெரிவித்துள்ளது.


No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.