Page Nav

தலைப்புச் செய்திகள்

latest


ஈரானை காக்க 1.4 கோடி மக்களும் உயிர் தியாகம் செய்ய தயார்: ஜனாதிபதி மசூத் கருத்து


ஈரானை பாதுகாக்க ஒன்றரை கோடி மக்கள் உயிர் தியாகம் செய்ய தயாராக இருப்பதாக ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியான் தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி எச்சரிக்கை

ஹார்முஸ் ஜலசந்தியை செவ்வாய்க்கிழமைக்குள் (இன்று இரவு 8 மணிக்குள்) திறக்காவிட்டால் ஒட்டுமொத்த ஈரானையும் அழித்து விடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தன்னுடைய சமூக ஊடக தளமான ட்ரூத் சோஷியல் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதில், ஒட்டுமொத்த ஈரான் நாகரிகமும் இன்று இரவுடன் அழியப் போகிறது. இந்த நாகரிகம் மீண்டு ஏழவே ஏழாது. இதை நான் ஒருபோதும் விரும்பவில்லை, ஆனால் பெரும்பாலும் இது இன்று நடக்கக் கூடும் என டிரம்ப் ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.


அத்துடன், 47 ஆண்டுகளாக நீடித்து வரும் அச்சுறுத்தல், ஊழல் மற்றும் மரணங்கள் ஒருவழியாக இன்று முடிவுக்கு வரும் என குறிப்பிட்டுள்ள டிரம்ப், ஈரான் மக்களுக்கு இறைவன் ஆசி வழங்கட்டும் எனவும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். உயிர் தியாகம் செய்ய தயார்

இந்த நிலையில், ஈரான் நாட்டை பாதுகாக்க 1 கோடி 40 லட்சத்துக்கும் மேற்கொள்ள ஈரான் நாட்டவர்கள் உயிர் தியாகம் செய்ய தயாராக இருப்பதாக அந்நாட்டின் ஜனாதிபதி மசூத் பெசஷ்கியான் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக X தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், 1.4 கோடிக்கும் அதிகமான மக்கள் ஈரானை காப்பாற்ற தியாகம் செய்ய தயாராக இருப்பதாக பதிவு செய்துள்ளார்.

அதில், ஈரானுக்காக நானும் உயிர் தியாகம் செய்ய தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.