சட்ட மாஅதிபர் திணைக்களத்தின் மேலதிக சொலிசிட்ட ஜெனரல் திலிப்ப பீரிஸ் அரசாங்கத்துக்கு சார்ப்பாக செயற்பட்டு சட்ட மாஅதிபர் பதவியை பெற்றுக்கொள்வதற்கு முயற்சித்து வருகிறார். அவரது கடந்த கால நடவடிக்கை எங்களுக்கு தெரியும் என எதிர்க்கட்சி உறுப்பினர் ஷாமர சம்பத் தசநாயக்க தெரிவித்தார்.பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (3) இடம்பெற்ற இலங்கை தொலை தொடர்புகள் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
ஜனாதிபதி செயலாளர்களில் சமன் ஏக்க நாயக்க கெளரவமான ஒரு செயலாளராவார். அவரது வழக்கு விசாரணையின்போது, அவரை பார்த்து ஊழல் காரர், மோசடி காரர் என சட்டமா அதிபர் சார்ப்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்ட ஜெனரால் திலிப்ப பீரிஸ் குற்றம் சாட்டினார். வழக்கு விசாரணைகளின்போது அவ்வாறு யாரையும் குற்றச்சாட்ட சட்டமா அதிபர் திணைக்கள சொலிசிட்டர் ஒருவருக்கு முடியாது.
அத்துடன் இன்னும் 3மாதங்களில் 3பேர் கொண்ட விசாரணை குழுவின் கீழ் இவர்களுக்கு எதிராக வழக்கு விசாரணை மேற்கொள்ளப்படும் என இவர் தெரிவித்தார்.
\இதனை தெரிவிப்பதற்கு திலிப்ப பீரிஸுக்கு எப்படி முடியும். பிரதம நீதியரசரே அதனை மேற்கொள்ள வேண்டும். அதனால் பிரதம நீதியசர்,சட்டமா அதிபரின் கடமைகளையும் இவர் கையில் எடுத்துக்கொண்டுள்ளார். திலிப்ப பீரிஸ் யார் என்பது எங்களுக்கு தெரியும். முன்னாள் பொலிஸ்மா அதிபர் தென்னகோனுடன் இரவில் ஒன்றாக குடித்து, அவரது வானத்தில் ஒன்றாக சென்று வந்தவர்.இறுதியில், மாத்தறை நீதிமன்றத்துக்கு சென்று, தென்னகோன் நீதிமன்றத்துக்கு வாகனத்தில் வந்தார் என அவருக்கு எதிராக திலிப்ப பீரிஸ் நீதிமன்றில் தெரிவித்தார்.
இவ்வாறு அரசாங்கத்தை பயன்படுத்திக்கொண்டு, நீதிமன்றில் அழுத்தம் கொடுத்து இந்த அரசாங்கத்திடமிருந்து சட்டமா அதிபர் பதவியை பெற்றுக்கொள்ள முடியும் என நினைத்துக்கொண்டிருக்கலாம். ஆனால் அந்த பதவியில் தொடர்ந்து இருக்க முடியாது என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் என்றார்.
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.