Page Nav

தலைப்புச் செய்திகள்

latest


ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவும் அவரது மகனும் கைது




முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினால் சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.  
வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் குறித்த பிரிவில் இன்று (5) காலை முன்னிலையான நிலையில், கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

முன்னாள் அமைச்சருடன் அவரது இளைய மகனும் கைது செய்யப்பட்டுள்ளார். 
சதொச நிறுவனத்திற்குச் சொந்தமான லொறி ஒன்றைத் தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இன்று நிதிக் குற்ற விசாரணை பிரிவுக்கு அழைக்கப்பட்டிருந்தார்.  வாக்குமூலம் வழங்கலின் பின்னர் அவரும், அவரது இளைய மகனும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.