இன்று (27) அதிகாலை 1.00 மணியளவில் ஹபரணை - திருகோணமலை பிரதான வீதியின் 124 ஆவது கிலோமீற்றர் தூணுக்கு அருகில் பயணித்த வேன் ஒன்றுடன் காட்டு யானை மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் காயமடைந்த வேனின் சாரதியும் பெண் ஒருவரும் ஹபரணை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்தில் சிக்கிய காட்டு யானை உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கவுடுல்ல தேசிய பூங்காவிலிருந்து ஹுருலு சூழலியல் பூங்கா நோக்கி பிரதான வீதியைக் குறுக்கறுத்துச் செல்ல முயன்ற போதே, இந்த யானை வேனுடன் மோதியுள்ளதாக கவுடுல்ல வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த காட்டு யானை சுமார் 12 வயதுடையது எனவும், அது 5 அடி உயரமான விலங்கு எனவும் வனவிலங்கு அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து கவுடுல்ல வனவிலங்கு அதிகாரிகள் மற்றும் ஹத்தரஸ்கொட்டுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
.jpeg)
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.