Page Nav

தலைப்புச் செய்திகள்

latest


மேலும் 2 பிரதேச செயலகங்களில் வெடி குண்டு அச்சம்!

 


நாவலப்பிட்டி, பஸ்பாகே கோரளை பிரதேச செயலகத்தின் களஞ்சிய அறையில் குண்டு இருப்பதாக அந்த அலுவலகத்தின் மின்னஞ்சலுக்கு இன்று (29) செய்தி ஒன்று கிடைத்துள்ளது. 

இந்தச் செய்தியையடுத்து, குறித்த பிரதேச செயலகத்தின் களஞ்சிய அறை உள்ளிட்ட வளாகம் இன்று அவசர சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.  பஸ்பாகே கோரளை பிரதேச செயலாளர் ரம்யா ஜயசுந்தரவுக்கு வெளிநாட்டிலிருந்து குறித்த மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. 

அதில், "கூடாரத்திற்குள் குண்டு ஒன்று உள்ளது. அது இன்று (29) பிற்பகல் 2:00 மணிக்கு வெடிக்கும்" எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.  இதனால் உடனடியாக செயற்பட்ட பிரதேச செயலாளர், அலுவலக ஊழியர்கள் மற்றும் அங்கு வருகை தந்திருந்த பொதுமக்களை வெளியேற்றி பாதுகாப்புப் பிரிவினருக்கு அறிவித்தார். 

நாவலப்பிட்டி பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடிப்படை, இராணுவக் குண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவு மற்றும் மோப்ப நாய் பிரிவினரின் உதவியுடன் முன்னெடுக்கப்பட்ட சோதனையில் சந்தேகத்திற்கிடமான எந்த பொருளும் கண்டறியப்படவில்லை.  அந்த இடத்திற்கு சென்ற கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துஷாரி ஜயசிங்கவும் நிலைமைகளை ஆராய்ந்தார்.  இதேவேளை, பூஜப்பிட்டிய பிரதேச செயலகத்திற்கு இன்று (29) பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாகக் கிடைத்த மின்னஞ்சல் போலியானது என விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பூஜப்பிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  எனினும், அந்த அலுவலகத்திற்கு விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.  நேற்று (28) விடுமுறை தினம் என்பதால், இன்று காலை அலுவலகம் திறக்கப்பட்ட போதே அதிகாரிகள் இந்த மின்னஞ்சலை அவதானித்துள்ளனர். 

அதில் இன்று பிற்பகல் 2:00 மணிக்கு முன்னர் அதிகாரிகளை வெளியேறுமாறு எச்சரிக்கப்பட்டிருந்தது. இது குறித்து பொலிஸாருக்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டை தொடர்ந்து, விசேட அதிரடிப்படையினர் மற்றும் குண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவினர் சுமார் 4 மணிநேரம் சோதனை நடத்திய போதிலும் சந்தேகத்திற்கிடமான எந்தபொருளும் கண்டறியப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.