Page Nav

தலைப்புச் செய்திகள்

latest


கெகிராவை விவசாயிகள் உற்பத்தி பொருட்களை விற்பனை செய்ய முடியாத அவல நிலையில்

கெகிராவையில்  விவசாயிகள் தமது உற்பத்தி பொருட்களை சிறந்த விலைக்கு விற்பனை செய்ய முடியாத துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

அரசாங்கத்தினால் சில மரக்கறிகளுக்கு நிர்ணய விலை அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் மொத்த விற்பனையாளர்கள் விவசாயிகளிடம் மிகக் குறைந்த விலைக்கே பொருட்களை கொள்வனவு செய்து வருகின்றனர்.

குறிப்பாக கறிமிளகாய் 150 ரூபா என்று விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ள நிலையில் விவசாயிகளிடம் 30 ரூபாவிற்கே கொள்வனவு செய்யப்படுவதாகவும் இதேபோல் கத்தரிக்காய் 20 முதல் 30 ரூபாவுக்கும் கொள்வனவு செய்யப்பட்டு 150 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக விவசாயிகள் அதிக செலவில் மரக்கறிகளை உற்பத்தி செய்த போதிலும் சிறந்த விலை கிடைக்காமையினால் பெரும் துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.