Page Nav

தலைப்புச் செய்திகள்

latest


முதல் தபால் மூல முடிவு நள்ளிரவுக்கு முதல்


2019 ஜனாதிபதித் தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில், மாலை 5.15 மணியளவில் தபால் மூல வாக்குகள் என்னும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் முதலாவதாக இரத்தினபுரி மாவட்ட தபால் மூல வாக்கெடுப்பு முடிவுகளை அறிவிக்கவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்ரிய தெரிவித்தார்.
தற்போது இடம்பெற்று வரும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.
மேலும் குறித்த முதல் தபால் மூல முடிவுகளை நள்ளிரவு 12 மணிக்குள் வெளியிட எதிர்பார்ப்பதாகவும் அதற்கு முன்னதாக 11 மணியளவில் வெளியாகவும் வாய்ப்புகள் இருக்கலாம் என்றும் அது தொடர்பில் நிச்சயித்து கூற முடியாது எனவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.