(கந்தளாய் ஆஸிர்)
திருகோணமலை கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோவில் கிராமத்தில்
முச்சக்கர வண்டியொன்று குடை சாய்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த மூவர் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இவ்விபத்துச் சம்பவம் நேற்று (8) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இவ்விபத்தில் திருகோணமலை பகுதியைச் சேர்ந்த 28,38,மற்றும் 14 மூவரே காயங்களுக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
முச்சக்கர வண்டியின் சாரதிக்கும் தலையில் சிறிய காயம் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
திருகோணமலை பகுதியிலிருந்து கந்தளாய் கோவில் கிராமம் பகுதிக்கு உறவினர்களின் வீட்டுக்கு முச்சக்கர வண்டிலே சென்றோரே இவ்வாறு மழை காரணமாக குடை சாய்ந்து விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
விபத்துச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.