அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்வி, கலாச்சார மற்றும் நலன்புரிப் பிரிவின் ஏற்பாட்டில், கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான கௌரவ ரிஷாட் பதியுதீனின் வழிகாட்டலின் கீழ் நாடளாவிய ரீதியில் கல்விச் சாதனைகளைப் படைத்த மாணவர்களை ஊக்குவிக்கும் முகமாக "Award of Excellence - 2026" (ASSAD INSPIRE AWARD) கௌரவிப்பு விழா மிகச் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இதன் ஒரு கட்டமாக, அனுராதபுர மாவட்ட மாணவர்களைப் பாராட்டி கௌரவிக்கும் பிரமாண்டமான விழா எதிர்வரும் 2026.10.17 அன்று (சனிக்கிழமை) பி.ப. 2.00 மணிக்கு அனுராதபுரம் நாச்சியாதீவு முஸ்லிம் மகா வித்தியாலய மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இவ்விழாவில் க.பொ.த (உயர்தரப்) பரீட்சையில் 3A சித்திகளைப் பெற்றவர்கள், Z-Score அடிப்படையில் பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவானவர்கள் மற்றும் க.பொ.த (சாதாரண தரப்) பரீட்சையில் 9A சித்திகளைப் பெற்ற சாதனை மாணவர்கள் ஆகியோர் பெற்றோர்களின் பங்கேற்புடன் கௌரவிக்கப்படவுள்ளனர்.
இன, மத மற்றும் சமூக வேறுபாடுகளுக்கு அப்பால் மாவட்டத்தின் கல்வித் திறமைகளை வெளிக்கொணரும் இம்மாபெரும் நிகழ்வில் சாதனை மாணவர்களைக் கலந்துகொள்ளச் செய்து அவர்களின் எதிர்கால கல்விச் சாதனைகளுக்கு வலுச்சேர்க்குமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொள்கின்றனர். மேலும், மாணவர்களின் வெற்றிக்குப் பங்களிக்கும் பாடசாலைகள் மற்றும் அதிபர்களைக் கௌரவிக்கும் விசேட நிகழ்வும் இதன்போது இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.