முன்னாள் பிரதியமைச்சர் சரண குணவர்தனவின் மனைவி சினாரி லக்மந்தி ஹெட்டியாராச்சி இன்று (25) கைது செய்யப்பட்டுள்ளார்.
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு இலக்கம் 11 மேல் நீதிமன்றத்தில் முன்னாள் பிரதிமைச்சர் சரண குணவர்தனவுக்கு எதிராக நிலுவையில் உள்ள வழக்கு தொடர்பாக, நீதிபதியை கொண்டு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனையைப் பெற்றுத் தருமாறு நீதிமன்ற அலுவலக உதவியாளர் ஒருவருக்கு 50,000 ரூபாய் இலஞ்சத்தை வழங்கிய குற்றச்சாட்டின் பேரில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.