Page Nav

தலைப்புச் செய்திகள்

latest

னோஜனின் சகோதரர் விடுத்துள்ள உருக்கமான வேண்டுகோள்: வதந்திகளைப் பரப்பி இன நல்லிணக்கத்தைச் சீர்குலைக்க வேண்டாம்!



சட்டரீதியாக மீட்டுவர உதவுமாறு குடும்பத்தினர் கண்ணீர் மல்க கோரிக்கை

சவூதி அரேபியாவில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் அனோஜன் என்பவரின் நிலைமை தொடர்பில் உறுதிப்படுத்தப்படாத தகவல்களைப் பரப்பி, இன நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் வகையில் செயற்பட வேண்டாம் என அவரது சகோதரரான ஹம்சிதன் ஹரிஷ் (Hamsithan Harish) பொதுமக்களிடமும் சமூக வலைத்தளப் பாவனையாளர்களிடமும் உருக்கமான கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளார்.

தமது சகோதரரின் தற்போதைய நிலை குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

"எனது அண்ணன் அனோஜன் சவூதி அரேபியாவில் சிறையில் உள்ள விடயம் அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில், சில நண்பர்கள் அனுதாபம் தெரிவித்து வரும் அதேவேளை, வேறு சிலர் உறுதிப்படுத்தப்படாத மற்றும் உண்மைக்குப் புறம்பான தகவல்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகின்றனர். இது எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் பெருத்த மனவேதனையையும் உளைச்சலையும் ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறான வதந்திகளைப் பகிர்வதன் மூலம் தேவையற்ற பிரச்சினைகள் உருவாவதுடன், இரு சமூகங்களுக்கிடையிலும் மனக்கசப்பும் இன ஒற்றுமையைக் குலைக்கும் சூழ்நிலையும் உருவாகியுள்ளது. எனவே, அன்பான சகோதரர்கள் தயவுசெய்து உறுதிப்படுத்தப்படாத எந்தவொரு செய்தியையும் பகிர்ந்து இனவாதத்தைத் தூண்டும் வகையில் செயற்பட வேண்டாம் எனப் பணிவாகக் கேட்டுக்கொள்கின்றேன்."

வழங்கப்பட்டுள்ள தண்டனை விபரங்கள் தனது சகோதரனுக்கு சவூதி சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள தண்டனை விபரங்களையும் அவர் குறித்த அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளார். அதன்படி,
  1. 5 வருட கால சிறைத்தண்டனை
  2. 3 மில்லியன் சவூதி ரியால் (3,000,000 SAR) அபராதம்
  3. பயன்படுத்திய கைத்தொலைபேசி பறிமுதல்
  4. முகநூல் (Facebook) கணக்கிற்குத் தடை
  5. வளைகுடா நாடுகளுக்குச் செல்வதற்கு நிரந்தரத் தடை (Gulf country permanent ban) ஆகியன விதிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மனிதநேயத்துடன் அணுகுங்கள் "இந்தக் கடினமான சூழ்நிலையில், எங்களது குடும்பத்தின் வேதனையைப் புரிந்துகொண்டு, பிரச்சினையை மேலும் பெரிதாக்காமல் எனது சகோதரனைச் சட்டரீதியாகவும் பாதுகாப்பாகவும் மீட்டுவர உங்களால் முடிந்த உதவிகளைச் செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

இனம், மதம் தாண்டிப் பலர் எங்களுக்கு ஆதரவு தெரிவித்து வரும் இச்சந்தர்ப்பத்தில், சமூக ஊடகவியலாளர்கள் இதனை மனிதநேயத்துடன் அணுக வேண்டும். உதவி செய்யாவிட்டாலும் உபத்திரம் செய்யாமல் இருப்பதே மேன்மையாகும். அனைவரினதும் பிரார்த்தனைகளும் உதவிகளுமே தற்போது எமக்குள்ள மிகப்பெரிய ஆறுதலாகும்" எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.