Page Nav

தலைப்புச் செய்திகள்

latest


கெக்கிராவ முஸ்லிம் மகா வித்தியாலய சாதனை மாணவி R.F. ரிஃப்னா காலமானார்



கெக்கிராவ முஸ்லிம் மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த சாதனை மாணவியான R. F. ரிஃப்னா இன்று அதிகாலை இறைவனடி சேர்ந்தார் (இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்).

கண்டி போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அதிகாலை 5.00 மணியளவில் அவர் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு நடைபெற்ற க.பொ.த உயர்தரப் பரீட்சையில் கலைப் பிரிவில் தோற்றி, 3A சித்திகளைப் பெற்று பாடசாலைக்கும் பிரதேசத்திற்கும் பெருமை சேர்த்த சிறந்த மாணவி இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அன்னாரின் மறைவு அவரது குடும்பத்தினர், பாடசாலைச் சமூகம் மற்றும் கெக்கிராவ பிரதேச மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்கவும், அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு வல்ல இறைவன் பொறுமையை அளித்தருளவும் பிரார்த்திப்போம்.


No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.