இரண்டாம் உலகப் போர் மற்றும் அதன் பின்னரான மோதல்களில் உயிரிழந்த நெதர்லாந்து பிரஜைகளை நினைவு கூரும் "நெினைவு தினம்" (Remembrance Day) இன்று கொழும்பில் அனுஷ்டிக்கப்பட்டது. இலங்கை மண்ணில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள நெதர்லாந்து யுத்த வீரர்களை கௌரவிக்கும் வகையில், கொழும்பு ஜவத்தை மயானத்தில் உள்ள பொதுநலவாய போர் மயானப் பகுதியில் இந்த நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.
நெதர்லாந்து தூதரகத்தின் பதில் தூதுவர் திரு. இவான் ரூட்ஜென்ஸ் அவர்கள் போர்க்கால நினைவுத் தூபிக்கும், அங்குள்ள நெதர்லாந்து வீரர்களின் கல்லறைகளுக்கும் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து உயிரிழந்தவர்களின் தியாகத்தைப் போற்றும் வகையில் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இரண்டாம் உலகப் போர் முதல் இதுவரையான காலப்பகுதியில் உயிரிழந்த 36 நெதர்லாந்து பிரஜைகளின் உடல்கள் கொழும்பு, கண்டி மற்றும் திருகோணமலை மயானங்களில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளன இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்ததிலிருந்து, நெதர்லாந்து அரசு ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 4 ஆம் திகதியை நினைவு தினமாக அனுஷ்டித்து வருகிறது.
1961 ஆம் ஆண்டு முதல், இரண்டாம் உலகப் போரில் கொல்லப்பட்ட 102,000 யூதர்கள் மற்றும் ஏனைய சிறுபான்மையினருடன், போர்கள் மற்றும் அமைதி காக்கும் பணிகளின் போது உயிரிழந்த அனைத்து நெதர்லாந்து பிரஜைகளும் இந்நாளில் நினைவு கூரப்படுகின்றனர்.
நெதர்லாந்தின் முக்கிய நிகழ்வு அந்நாட்டின் நேரப்படி இரவு 8:00 மணிக்கு ஆம்ஸ்டர்டாமில் உள்ள 'டேம் சதுக்கத்தில் மன்னர் மற்றும் முக்கிய பிரமுகர்களின் பங்கேற்புடன் நடைபெறும்.
அதே நேரத்தில் நெதர்லாந்து நாடு முழுவதும் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டு, போக்குவரத்து உட்பட அனைத்து செயற்பாடுகளும் நிறுத்தப்படுவது வழக்கமாகும்.
இலங்கையிலும் இந்த முக்கிய தினத்தை முன்னிட்டு, இங்குள்ள நெதர்லாந்து தூதரகம் ஆண்டுதோறும் இவ்வாறான நினைவேந்தல் நிகழ்வுகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.