நாளை (18) நள்ளிரவு முதல் பெற்றோல் வாகனங்களுக்காக மீண்டும் QR முறைமை நடைமுறைப்படுத்தப்படும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இதன்படி, முன்னைய எரிபொருள் ஒதுக்கீடு மீண்டும் நடைமுறைக்கு வரும் என அதன் தலைவர் டி.ஜே. ராஜகருணா குறிப்பிட்டுள்ளார்.
புத்தாண்டு காலத்தை முன்னிட்டு, கடந்த 11ஆம் திகதி நள்ளிரவு முதல் நாளை வரை பெற்றோல் வாகனங்களுக்கு எரிபொருள் விநியோகிக்கும் போது QR முறைமையைக் கருத்தில் கொள்ளாதிருக்க இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்திருந்தது.
எவ்வாறாயினும், அந்த காலப்பகுதியில் வாகன இலக்கத் தகட்டின் ஒற்றை, இரட்டை இலக்க முறைமை பின்பற்றப்பட்டதுடன், டீசல் வாகனங்களுக்கான QR முறைமை மாற்றமின்றி நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது.
இந்த நிலையில், நாளை நள்ளிரவு முதல் அனைத்து வாகனங்களுக்கும் மீண்டும் QR முறைமையைச் செயற்படுத்துவதற்கு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.