Page Nav

தலைப்புச் செய்திகள்

latest


இலங்கை பாதுகாப்பில் இருந்த ஈரான் மாலுமிகள் நாடு திரும்பினர்


இலங்கையின் பாதுகாப்பில் இருந்த ஈரான் கடற்படையைச் சேர்ந்த 240 மாலுமிகள் இன்று (14) ஈரான் நாட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இலங்கை கடற்பரப்புக்கு அருகில் அமெரிக்கத் தாக்குதலுக்குள்ளான ஈரானின் 'IRIS Dena' கப்பலில் இருந்து மீட்கப்பட்ட 32 மாலுமிகளும், ஈரான் கடற்படைக்குச் சொந்தமான 'IRIS Bushehr' கப்பலில் இருந்த 204 மாலுமிகளுமே இவ்வாறு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.

இந்தக் குழுவினர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து விசேட துருக்கி விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.