கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன பயணித்த மோட்டார் வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளது.
நேற்று (22) இரவு அவர் கொழும்பிலிருந்து ஹட்டன் ஊடாக நுவரெலியா நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தபோது, கித்துல்கலை களுகொஹு தென்ன பகுதியில் அவர் பயணித்த கேப் ரக வாகனம் வழுக்கிச் சென்று வீதியோரத்திலிருந்த மின்சாரக் கம்பமொன்றில் மோதியதாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தின் போது பிரதி அமைச்சருக்கோ அல்லது வாகனத்தைச் செலுத்திய சாரதிக்கோ எவ்வித காயங்களும் ஏற்படவில்லை. எவ்வாறாயினும், விபத்தினால் வாகனத்திற்குப் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் கித்துல்கலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.