வக்பு சபையின் புதிய தலைவராக மர்ஷட் பாரி நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 24ஆம் திகதி வெள்ளிக்கிழமை திகதியிடப்பட்ட இந்த நியமனம், புத்தசாசன, சமய விவகார மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவியினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அமானா வங்கியின் சிரேஷ்ட உத்தியோகத்தரான இவர், குறித்த வங்கியினால் முன்னெடுக்கப்படும் OrphanCare செயற்திட்டத்தின் பிரதி தலைராகவும் (Deputy Head) செயற்படுகின்றார்.
ஸ்ரீலங்கா – மலேசியா பிஸ்னஸ் கவுன்சிலின் தலைவரான இவர், ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம், ரொட்டரி கழகம் உள்ளிட்ட பல சிவில் அமைப்புக்களின் சிரேஷ்ட உறுப்பினராவார். இதேவேளை, 27ஆவது வக்பு சபையின் புதிய உறுப்பினர்களுக்கான நியனம், நாளை (28) செவ்வாய்க்கிழமை சமய விவகார மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சர் முனீர் முழப்பரினால் வழங்கப்படவுள்ளமை குறிப்பிட்டத்தக்கது

No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.