Page Nav

தலைப்புச் செய்திகள்

latest


பதுளை போதனா வைத்தியசாலை வைத்தியர்களின் பணிப்புறக்கணிப்பு தொடர்பான செய்தியின் விளக்கம்


பதுளை போதனா வைத்தியசாலையின் அரச மருத்துவ அதிகாரிகள் சங்க (GMOA) வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடாமல் கடமையில் ஈடுபட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் செய்தி குறித்து, அந்தச் சங்கத்தின் உதவிச் செயலாளர் வைத்தியர் பாலித ராஜபக்ஷ பின்வருமாறு விளக்கமளித்துள்ளார். 

அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ள நாடு தழுவிய பணிப்புறக்கணிப்பில் பங்கேற்காமல், பதுளை போதனா வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவில் (OPD) கடமையாற்றும் அந்தச் சங்கத்தைச் சேர்ந்த இரண்டு வைத்தியர்கள் மாத்திரம் கடந்த (8) ஆம் திகதி பணியில் ஈடுபட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். 


பதுளை போதனா வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு வைத்தியர்கள் வழமை போன்று கடமையில் ஈடுபட்டுள்ளதாகக் கிடைத்த தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட வினவலுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். 

இது குறித்து மேலும் கருத்துத் தெரிவித்த வைத்தியர் பாலித ராஜபக்ஷ பதுளை போதனா வைத்தியசாலையின் சுமார் 400 வைத்தியர்கள் எமது சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ளனர். அவர்களில் வெளிநோயாளர் பிரிவில் பணியாற்றும் இரண்டு வைத்தியர்கள் மாத்திரமே இன்று வழமை போல் கடமையில் ஈடுபட்டுள்ளனர்.

அவர்களில் ஒருவர் பதுளையின் உள்ளூர் அரசியல்வாதி ஒருவரின் உறவினர் எனத் தெரியவந்துள்ளது. பணிப்புறக்கணிப்புக்கு ஆதரவளித்து சேவையிலிருந்து விலகியிருந்தால், தனது உறவினர் வகிக்கும் பதவியைக் கூட இழக்க நேரிடும் என்ற அச்சத்தினால் அவர் கடமைக்கு சமூகமளித்துள்ளார். எனினும், அந்த இருவரால் வெளிநோயாளர் பிரிவின் முழுமையான சேவையை வழங்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார். 

அந்த இரு வைத்தியர்களைத் தவிர, அவசர சிகிச்சைப் பிரிவு மற்றும் அறுவைச் சிகிச்சை கூடங்களில் ஏனைய வைத்தியர்கள் கடமையில் ஈடுபட்டுள்ளனர். பணிப்புறக்கணிப்பு இடம்பெற்றாலும், அப்பாவி நோயாளிகளை அனுமதிப்பது போன்ற அத்தியாவசிய பணிகளைப் புறக்கணித்து அவர்கள் உயிரிழப்பதைப் பார்த்துக் கொண்டிருப்பது தமது சங்கத்தின் நோக்கமல்ல என்றும் வைத்தியர் பாலித ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.