Page Nav

தலைப்புச் செய்திகள்

latest


அரச இழப்பீட்டில் கட்டப்பட்ட புதிய வீட்டில் ஜனாதிபதியுடன் புத்தாண்டு!


தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டு சடங்குகளில் கலந்துகொள்ளும் நோக்கில், டித்வா புயலினால் சேதமடைந்து, அநுராதபுரம் கல்நேவ பிரதேச செயலகப் பிரிவின் மல்பெலிகல கிராம உத்தியோகத்தர் பிரிவில் வசிக்கும் எச்.எம். இந்திரஜித் சம்பத் சேனாரத்ன என்பவரது புதிய வீட்டிற்குள் குடிபுகும் மற்றும் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இன்று (14) முற்பகல் கலந்துகொண்டார். 
முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்கு வழங்கப்பட்ட இழப்பீட்டுத் தொகையின் கீழ் ஐந்து மாத காலப்பகுதியில் இந்த வீடு கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

கல்நேவ பிரதேச செயலகப் பிரிவில் முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்காக நிர்மாணிக்கப்படும் ஆறு புதிய வீடுகளில் இதுவும் ஒன்றாகும். அதேவேளை, இப்பிரதேச செயலகப் பிரிவில் பகுதியளவில் சேதமடைந்த 66 வீடுகளுக்கான இழப்பீடுகளும் தற்போது வழங்கி முடிக்கப்பட்டுள்ளன.

பிரதேச மக்களுடன் இணைந்து புதிய வீட்டில் புத்தாண்டு சடங்குகளில் ஈடுபட்ட ஜனாதிபதி, அங்கிருந்த அனைவருக்கும் தனது புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தார். அத்துடன், ஜனாதிபதியை அன்புடன் வரவேற்ற பிரதேச மக்கள், அவருக்கும் தமது புத்தாண்டு வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டனர். இந்நிகழ்வில் அரசாங்கத்தின் பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.


No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.