Page Nav

தலைப்புச் செய்திகள்

latest


கொழும்பு திரும்புவோருக்காக விசேட புகையிரத சேவைகள்


புத்தாண்டுக்காகத் தத்தமது ஊர்களுக்குச் சென்ற மக்கள் மீண்டும் கொழும்பு திரும்புவதற்காகப் புகையிரதத் திணைக்களம் பல விசேட புகையிரதப் பயணங்களை ஏற்பாடு செய்துள்ளது.
இந்தப் புகையிரதச் சேவைகள் நாளை (18) மற்றும் நாளை மறுதினம் (19) ஆகிய தினங்களில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகப் புகையிரதத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, அனுராதபுரம், காங்கேசன்துறை, மாத்தறை மற்றும் பெலியத்த ஆகிய இடங்களிலிருந்து மீண்டும் கொழும்பு திரும்புவதற்காக இந்த விசேட புகையிரதச் சேவைகள் திட்டமிடப்பட்டுள்ளன என்றும், இவை சாதாரண புகையிரதச் சேவைகளுக்கு மேலதிகமாக ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் புகையிரதத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

புகையிரத அட்டவணை

[1] கொழும்பு கோட்டை / அனுராதபுரம் / கொழும்பு கோட்டை - 2026 ஏப்ரல் 18 மற்றும் 19

கொழும்பு கோட்டையிலிருந்து புறப்பாடு: மு.ப. 07.40

அனுராதபுரத்தை சென்றடைதல்: மு.ப. 11.35

அனுராதபுரத்திலிருந்து புறப்பாடு: பி.ப. 02.00

கொழும்பு கோட்டையை சென்றடைதல்: பி.ப. 06.05

[2] கொழும்பு கோட்டை / அனுராதபுரம் / கொழும்பு கோட்டை - 2026 ஏப்ரல் 18 மற்றும் 19

கொழும்பு கோட்டையிலிருந்து புறப்பாடு: மு.ப. 06.40

அனுராதபுரத்தை சென்றடைதல்: மு.ப. 10.38

அனுராதபுரத்திலிருந்து புறப்பாடு: மு.ப. 10.50

கொழும்பு கோட்டையை சென்றடைதல்: பி.ப. 02.54

[3] காங்கேசன்துறை / அனுராதபுரம் / காங்கேசன்துறை - 2026 ஏப்ரல் 18 மற்றும் 19

காங்கேசன்துறையிலிருந்து புறப்பாடு: மு.ப. 06.00

அனுராதபுரத்தை சென்றடைதல்: மு.ப. 10.18

அனுராதபுரத்திலிருந்து புறப்பாடு: மு.ப. 10.50

காங்கேசன்துறையை சென்றடைதல்: பி.ப. 02.22

[4] மருதானை / மாத்தறை - 2026 ஏப்ரல் 18

மருதானையிலிருந்து புறப்பாடு: பி.ப. 01.00 (13.00)

மாத்தறையை சென்றடைதல்: பி.ப. 04.37 (16.37)

[5] மாத்தறை / மருதானை - 2026 ஏப்ரல் 19

மாத்தறையிலிருந்து புறப்பாடு: மு.ப. 11.15

மருதானையை சென்றடைதல்: பி.ப. 02.47

[6] மருதானை / பெலியத்த - 2026 ஏப்ரல் 18

மருதானையிலிருந்து புறப்பாடு: பி.ப. 04.40 (16.40)

பெலியத்தவை சென்றடைதல்: பி.ப. 08.40 (20.40)

[7] பெலியத்த / மருதானை - 2026 ஏப்ரல் 18 மற்றும் 19

பெலியத்தவிலிருந்து புறப்பாடு: மு.ப. 08.20

மருதானையை சென்றடைதல்: பி.ப. 12.30

[8] பெலியத்தவிலிருந்து மஹவ வரை இயக்கப்பட்ட ரஜரட்ட ரெஜினி புகையிரதம் தற்போது தினசரி அனுராதபுரம் வரை இயக்கப்படுகிறது.

பெலியத்தவிலிருந்து புறப்பாடு: மு.ப. 08.55

கொழும்பு கோட்டையிலிருந்து புறப்பாடு: பி.ப. 01.15

அனுராதபுரத்தை சென்றடைதல்: பி.ப. 06.47

அனுராதபுரத்திலிருந்து புறப்பாடு: மு.ப. 05.15

கொழும்பு கோட்டையிலிருந்து புறப்பாடு: மு.ப. 10.30

பெலியத்தவை சென்றடைதல்: பி.ப. 03.00

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.