பண்டிகைக் காலத்தை முன்னிட்டு முன்னெடுக்கப்படும் விசேட சுற்றிவளைப்புகள் மற்றும் சோதனை நடவடிக்கைகளை எதிர்வரும் ஏப்ரல் 30 ஆம் திகதி வரை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. கடந்த மார்ச் 20 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதிக்குள், நுகர்வோரை அசௌகரியத்திற்கு உள்ளாக்கியமை தொடர்பில் சுமார் 2,000 சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த அதிகார சபையின் தகவல் மற்றும் நுகர்வோர் விவகார பணிப்பாளர் அசேல பண்டார தெரிவித்தார்.
பண்டிகைக் காலத்திற்காக நுகர்வோர் விவகார அதிகார சபை முன்னெடுக்கும் விசேட சுற்றிவளைப்பு வேலைத்திட்டத்தை ஏப்ரல் 30 வரை செயற்படுத்துகிறோம்.
குறிப்பாக விலைப் பட்டியலைக் காட்சிப்படுத்தாமை, பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்தல், சந்தையில் நுகர்வோரை பல்வேறு அசௌகரியங்களுக்கு உள்ளாக்குதல் மற்றும் அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளைத் தடுப்பதற்கான அவசியமான நடவடிக்கைகளை எமது அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர்.
ஏதேனும் நுகர்வோர் சந்தையில் அநீதி அல்லது பிரச்சினைகளை எதிர்கொண்டால், அலுவலக நேரங்களில் நுகர்வோர் விவகார அதிகார சபையின் 1977 என்ற அவசரத் தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்துத் தகவல்களை வழங்க முடியும்.
அதற்கமைய அதிகாரிகள் தேவையான தலையீடுகளை மேற்கொள்வார்கள் என அவர் மேலும் குறிப்பிட்டார்.
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.