Page Nav

தலைப்புச் செய்திகள்

latest


வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சீனப் பிரஜை கைது


சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட 39 இலட்சத்து 15 ஆயிரம் ரூபா பெறுமதியான சீனத் தயாரிப்பு சிகரெட்டுகளுடன் சீன நாட்டுப் பயணி ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். இன்று (11) அதிகாலை முன்னெடுக்கப்பட்ட சுங்க நடவடிக்கை ஒன்றின் போது, சுங்க அதிகாரிகளினால் இந்தச் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் 35 வயதுடைய சீன நாட்டு வியாபாரி என்பதுடன், அவர் மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து இன்று அதிகாலை 12.50 மணியளவில் கட்டுநாயக்கவை வந்தடைந்துள்ளதாக "KEKIRAWA  NEWS" செய்தியாளர் தெரிவித்தார். அவர் கொண்டு வந்த இரண்டு பயணப் பொதிகளுக்குள் 26,100 சிகரெட்டுகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை சுங்க அதிகாரிகளின் முறையான சோதனையின் போது கண்டறியப்பட்டது.

மீட்கப்பட்ட சிகரெட் தொகுதி அரசுடைமையாக்கப்பட்டதுடன், சந்தேக நபருக்கு ஒரு இலட்சம் ரூபா அபராதம் விதிக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.