Page Nav

தலைப்புச் செய்திகள்

latest


மதுபானம் அருந்த பணம் தராத தாயைக் கொலை செய்த மகன்: மட்டக்களப்பில் சோகம்


மட்டக்களப்பு, சித்தாண்டியில் மதுபானம் அருந்துவதற்காக 1,000 ரூபா பணம் தராத ஆத்திரத்தில், தனது தாயைத் தள்ளி விழுத்திக் கொலை செய்த 19 வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளதாக சந்திவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று (17) மாலை இடம்பெற்ற இச்சம்பவம் குறித்த விபரங்கள் வருமாறு:

சித்தாண்டி 4ஆம் பிரிவு, பழைய சந்தை வீதியைச் சேர்ந்த 42 வயதுடைய குமாரசாமி வசந்தா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவதினம் மாலை 6.00 மணியளவில், சந்தேகநபரான மகன் தனது தாயிடம் மது அருந்துவதற்காக 1,000 ரூபா பணம் கேட்டுள்ளார். தாயார் தன்னிடம் பணம் இல்லை என்று கூறியதால் ஆத்திரமடைந்த மகன், தாயைப் பிடித்து ஆவேசமாகத் தள்ளியுள்ளார்.

இதன்போது நிலைதடுமாறி கீழே விழுந்த தாயின் தலை தரையில் பலமாக மோதியதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தையடுத்து தப்பியோடிய இளைஞனை பொலிஸார் தேடிப் பிடித்துக் கைது செய்தனர். உயிரிழந்தவரின் சடலம் மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சந்திவெளி பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.