Page Nav

தலைப்புச் செய்திகள்

latest


உலக உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிப்பு

 


மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் எரிசக்தி மற்றும் எரிபொருள் விலைகள் அதிகரித்துள்ளதன் காரணமாக, கடந்த மார்ச் மாதத்தில் உலக உணவுப் பொருட்களின் விலைகள் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குப் பின்னரான உச்சத்தை எட்டியுள்ளன. 


இந்த போர் மோதல்கள் மேலும் 40 நாட்களுக்கு மேல் நீடித்தால், எரிபொருள் மற்றும் உரம் போன்ற உற்பத்திச் செலவுகள் உயர்மட்டத்தில் இருக்கும் என்பதால், விவசாயிகள் பயிர்ச் செய்கை நடவடிக்கைகளைக் குறைக்க முற்படலாம் என ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பு (FAO) எச்சரித்துள்ளது. 

இதன் காரணமாக, இந்த ஆண்டின் உணவு விநியோகம் மட்டுமன்றி, அடுத்த ஆண்டின் உணவு விநியோகம் மற்றும் பொருட்களின் விலைகளிலும் கடும் தாக்கம் ஏற்படும் என அவ்வமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. 

ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் தரவுகளின்படி, உலக உணவு விலைச் சுட்டெண் பெப்ரவரி மாதத்தை விட 2.4% அதிகரித்துள்ளது. 

அதன்படி, சீனி விலை 7.2% ஆகவும், தாவர எண்ணெய் விலை 5.1% ஆகவும் உயர்ந்துள்ளதுடன், கோதுமை விலையும் 4.3% ஆல் அதிகரித்துள்ளது. 

இருப்பினும், அறுவடைக்காலம் மற்றும் இறக்குமதி கேள்வி குறைவடைந்ததன் காரணமாக அரிசி விலை 3.0% ஆல் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.